peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


herbal.tips.tamil.peperonity.net

விளாம்பழம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகிற்கும் அ

Fruit For Face,

வுட் ஆப்பிள்(Wood Apple) என
ஆங்கிலத்தில் அழைக்கப்படும்
விளாம்பழத்தில் எண்ணற்ற மருத்துவ
குணங்கள் உள்ளது.
முரட்டு ஓட்டுடன்
பார்வைக்கு சாதாரணமாக இருக்கிற
விளாம் பழம், ஒரு அழகுக்
கலை நிபுணருக்கு இணையானது.
விளாம்பழத்தில் நிறைந்த அளவில்
சிட்ரிக் அமிலமும் சிறு அளவில்
பொட்டாஷியம், கால்ஷியம் மற்றும்
இரும்பு போன்ற சில மணிச்சத்துக்களும்
காணப்படுகின்றன.
விளாம்பழத்தில் அமிலத்தன்மையும்
பழுக்காத விளாங்காயில் துவர்ப்புத்
தன்மையும் இருக்கிறது.
விளாம்பழத்தின் அழகு குறிப்புக்கள் :
முகம் பொலிவு பெற :
இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன்
இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச்
சேர்த்து மிச்சியில் நன்றாக அடித்துக்
கொள்ளவும். இதை முகத்தில் ‘மாஸ்க்’ போல
போடுங்கள். விளாம்பழ
விழுது எவ்வளவு நேரமானாலும்
உலராது என்பதால், சிறிது நேரத்தில்
நீங்களாகவே கழுவி விடுங்கள். இந்த
சிகிச்சையை தினமும் காலையில்
செய்து வந்தால் இழந்த
பொலிவு மீள்வதுடன், உங்கள் முகம் இன்னும்
இளமையாக மாறும்.
பரு தொல்லை நீங்க :
பயத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
விளாங்காய் விழுது - 2 டீஸ்பூன்,
பாதாம்பருப்பு - 2.
இவை அனைத்தையும் முந்தைய நாள்
இரவே ஊறவைத்து மறுநாள் விழுதாக
அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கிரீம்-ஐ முகத்தில் பூசினால்
நாள்பட்ட பருக்கள் கூட மாயமாக
மறைந்துவிடும். தழும்பும் இருந்த இடம்
தெரியாமல் போய்விடும். இந்த கலவையில்
உள்ள விளாங்காயும் பாதாம்பருப்பும்
தோலை மிருதுவாக்கும்.
பயத்தம்பருப்பு சருமத்தை
சுத்தப்படுத்தும்.
மென்மையான சருமத்திற்கு :
விளாம்பழத்தின் சதைப் பகுதியைத்
தனியே எடுத்துக் காய வையுங்கள்.
இதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள்,
பூலான் கிழங்கு, காய்ந்த
ரோஜா மொட்டு ... எல்லாவற்றையும் சம
அளவு எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.
இதை குளியல் பவுடராக
பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல்
மிருதுவாவதுடன்,
கரும்புள்ளிகளும் ... காணாமல் போகும்.
விளாம்பழத்தின் ஆரோக்கிய குறிப்புகள் :
விளாம்பழத்தை, வெல்லம்
சேர்த்து பிசைந்து 21 நாட்கள்
சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான
...


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.