peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


herbal.tips.tamil.peperonity.net

அழகு குறிப்புகள்:கவலையளிக்கும் கரு வளையங்களா....?!

அன்பும், அமைதியும் குடிகொண்ட மனதில் முகம் தானாகவே அழகாகும். தீபத்தின் சுடர் போல
பெண்களின் முகம் பிரகாசமடையும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும்
அழகு சேர்க்க சில டிப்ஸ்:
ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள் பெண்களின் அழகில் ஆடையின் பங்கு முக்கியமானது.
ஆடை அணிவது முதலில் வசதிக்காகக்தான். உடலை கவ்விப் பிடிக்கும்
ஆடைகளை தவிர்ப்பது நல்லது. அதேசமயத்தில் ரிலாக்ஸ்டாக இருக்கிறது என்று ஓவராக
தொளதொளவும் வேண்டாம். கச்சிதமாக இருப்பதே அழகு.
கம்பீர அழகு
வேலைக்கு போகும் பெண்களுக்கு புடவை கம்பீரமாக இருந்தாலும், இன்றைய சூழலில்
அதை எப்போதுமே கட்ட முடியாது. சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற ஆடைகளே சவுகர்யமானது.
உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுகிற வேலை என்றாலும் ஜீன்ஸ் சவுகர்யம், வெளியூர்
அல்லது உல்லாசப் பயணத்துக்கு ஜீன்ஸ் எப்போதும் வசதிதான். பணியிடத்தில்
இடுப்பு அல்லது பின்புறம் முழுமையாக தெரியும் வகையிலான
குட்டை டாப்ஸை தவிர்ப்பது நல்லது.
பொறுப்புள்ள பணியில் இருப்பவர்கள் ஓரளவு டல் கலரில் பேன்ட்டும் அதே துணியில் முக்கால்
கை சட்டையும் அணியும்போது அசத்தலாக தோற்றமளிக்கும். கேஷுவல்
உடைகளை பொறுத்தவரை இது பெண்களுக்கானது, இது ஆண்களுக்கானது என்ற வித்தியாசம்
மறைந்து வருவதால் எதெல்லாம் உடலுக்கும் வேலைக்கும் சவுகர்யமாக
இருக்கிறதோ அதையெல்லாம் அணிய பழகிக்கொள்ள வேண்டும்.
கவலை ரேகை வேண்டாம்
மனதில் தாழ்வு மனப்பான்மை, அலட்சியம், தற்பெருமை ஆகியவை கூடாது. இதனால், முகத்தில்
கவலை ரேகைகள் படரும், நம் எண்ணத்திலும், செயல்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அமைதியான மனமும், அதை வெளிக்காட்டும் முகமும் வேண்டும்.!
மன அமைதியுடன் இருந்தால் முகம் பொலிவடையும் இதற்கு தியானம் மிகச் சிறந்தது. சரியான
தூக்கம் தேவை. தினமும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் நித்திரைகொள்ளுதல் நல்லது. இல்லாவிட்டால்
கண்களின் அடியில் கருவளையம் விழும். இதனால் முகத்தில் ஒருவித முதிர்ச்சி தெரியும். அதேபோல்
கண்கள் சோர்ந்து காணப்பட்டாலே பாதி அழகு குறைந்த மாதிரிதான்.!
சத்தான உணவு தேவை
காலையில் ...


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.