peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


herbal.tips.tamil.peperonity.net

நோய்களை தூளாக்கும் துளசி

துளசி செடியின்
அனைத்து பாகங்களும் மருத்துவ
தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில்
அனைவர் வீட்டிலும்
இச்செடி இருக்கும்.
இப்போது இச்செடி இருக்கும்
வீடுகளின் எண்ணிக்கை மிகவும்
குறைவு. வீட்டில் துளசி மாடம்
என்று ஒவ்வொரு வீட்டிலும்
துளசியை வளர்த்தனர்
இன்று அடுக்குமாடி
குடியிருப்பில்
துளசி வளர்ப்பவர்களின்
எண்ணிக்கையும்
அதை பயன்படுத்துபவர்களின்
எண்ணிக்கையும் குறைந்து விட்டது.
பெருமாள் கோயிலில்
கொடுக்கப்படும் தீர்த்தத்தில் தான்
இன்று துளசியை நிறைய பேர்
பார்க்கின்றனர்.
சாமிக்கு சூடப்படும் மாலையில்
தான் சிலர்
துளசியை பார்க்கின்றனர் தினமும்
இரண்டு இலை துளசி சாப்பிட்டால்
நோயை விரட்டலாம் ஆனால்
சாப்பிடுபவர்கள்
எண்ணிக்கை குறைவு தான்.
துளசிச் செடியை ஆரோக்கியமான
மனிதன் தினமும் தின்று வந்தால்
குடல், வயிறு, வாய் தொடர்பான
பிரச்சினைகள் அவன் வாழ்நாள்
முழுவதும் வராது. ஜீரண
சக்தியும், புத்துணர்ச்சியையும்
துளசி இலை மூலம் பெறலாம். வாய்
துர்நாற்றத்தையும் போக்கும்.
நமது உடலுக்கான
கிருமி நாசினியாக
துளசியை உட்கொள்ளலாம்.
துளசி இலையைப் போட்டு ஊற வைத்த
நீரை தொடர்ந்து பருகி வந்தால்
நீரழிவு எனப்படும்
சர்க்கரை வியாதி நம்மை நாடாது.
கோடை காலத்தில்
வியர்வை நாற்றமும்
கூடவே வந்துவிடும். அதனைத்
தவிர்க்க குளிக்கும் நீரில்
முந்தைய நாளே கொஞ்சம் துளசி
இலையைப் போட்டு வைத்து அதில்
குளித்தால் உடல் மணக்கும். தோலில்
பல நாட்களாக இருக்கும் படை,
சொரிகளையும் துளசி இலையால்
குணமடையச் செய்ய முடியும்.
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல்
அரைத்து அந்த விழுதை தோலில்
தடவி வந்தால் படை சொரி இருந்த
இடம் தெரியாமல் மறையும்.
சர்க்கரை நோய் வந்தவர்களும்
துளசி இலையை மென்று திண்ணலாம்.
இதனைச் செய்து வந்தால்
சர்க்கரை அளவு கட்டுப்படும்.
மருந்து மாத்திரை மூலம் செய்ய
முடியாததை இந்த அருமருந்தான
துளசி செய்துவிடும். சிறுநீர்
கோளாறு உடையவர்கள்,
துளசி விதையை நன்கு
அரைத்து உட்கொண்டு வர வேண்டும்.
கூடவே உடலுக்குத் தேவையான
அளவிற்கு தண்ணீரும் பருகி வர
பிரச்சினை சரியாகும்.
துளசி இலையைப் போட்டு ஊற வைத்த
நீரை தொடர்ந்து ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.