peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


herbal.tips.tamil.peperonity.net

வரும் முன் காக்கும் தடுப்பு மருந்து வந்த பின் தீர்

நிலவேம்பு: வெயிலில்
வெந்து நொந்தவர்களுக்கு நவம்பர்
மாதத்தில்
சட்டென்று வானிலை மாறுவது எத்தனை இதம்
என்று சொல்லத் தேவையில்லை.
‘பனிவிழும் மலர்வனம்’
என்று பாடுவதற்கோ,
‘அடடா மழைடா...’
என்று ஆடுவதற்கோ இதுவே சரியான
நேரம். ஆனால், இந்த ரம்மியமான
காலத்தில்தான் ஜலதோஷம், காய்ச்சல்,
தலைவலி என்று பல அழையாத
விருந்தாளி களையும் சமாளிக்க
வேண்டி யிருக்கிறது.
‘‘மருத்துவமனைகள்
நிரம்பி வழியும் இந்த பருவ
காலத்தில் நோய் வரும் முன்னர்
காக்கும் தடுப்பு மருந்தாகவும்
வந்த பின்னர் நோயைத் தீர்க்கும்
அருமருந்தாகவும்
இரண்டு வேலைகளை செய்கிறது நிலவேம்பு’’
என்கிறார் சித்த மருத்துவரான
அபிராமி. ஆமாம்... சமீபகாலமாக
அடிக்கடி கேள்விப்படும்
அதே நிலவேம்பு தான்!
‘‘நிலவேம்பு என்பது 2
அடி வரை வளரும் ஒரு செடி வகை.
மலை, மண் வளம் உள்ள இடங்களில்
எளிதாக வளரும். தாவரவியலில்
Andrographis Paniculata
என்று இந்தச்
செடியை அழைக்கிறார்கள். நாம்
அடிக்கடி கேள்விப்படுகிற
நிலவேம்பு கஷாயம் இந்த
செடியிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.
இந்தக் கஷாயத்தை 9
கூட்டுமருந்துகள் கலந்து சித்த
மருத்துவர்கள் கொடுப்பார்கள். இந்த
கஷாயத்தைதான் நிலவேம்பு குடிநீர்
என்று சொல்கிறோம். கடந்த சில
வருடங்களாக விதவிதமான
காய்ச்சல்கள் நம் ஊரில்
வந்துகொண்டிருப்பது எல்லோருக்கும்
தெரியும். டெங்கு காய்ச்சல்,
பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல்
என்று புதிய புதிய காய்ச்சல்கள்
வரும்போது வழக்கமான மருத்துவ
முறைகளால் சமாளிக்க முடியாத
சூழ்நிலையை
நிலவேம்பு சாதித்திருக்கிறது...’’.
நிலவேம்பு பிரபலமானது எப்படி?
‘‘திடீரென பன்றிக் காய்ச்சல் பரவிக்
கொண்டிருந்த போது நவீன
மருத்துவம் இருந்தும் என்ன
செய்வது என தெரியாமல்
அரசாங்கமே ஸ்தம்பித்துப் போனது.
ஒரு பக்கம் அதை பற்றிய பயம்,
மறுபக்கம் அது என்ன காய்ச்சல்
என்று தெரியாத நிலை, போதுமான
பரிசோதனை நிலையங்கள் இல்லாமல்
மாதிரிகளை எடுத்துக்
கொண்டு அலைக்கழிந்த இக்கட்டான
நேரத்தில் நிலவேம்பு பெரிய
...


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.