peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


kathal.kaditham.love.laters.peperonity.net

மனதை திருடி மடியில் வைத்துக்கொண்டாய்

உன்னில் நான் சரணடைந்து வெகுநாட்கள் ஆகிறது. என் அன்பை வார்த்தைகளால் கொட்டியும் விட்டேன் நீ வெறுப்பும் காட்டவில்லை விருப்பமும் சொல்லவில்லை என்னைக்கொல்லும் ஆயுதமாய் உன் மௌனம்!

மனதை திருடி மடியில் வைத்துக்கொண்டாய்! அன்பை வளர்த்து உனக்குள்ளேயே புதைத்துக்கொல்கிறாய்!

ஏனடி பெண்ணே உன் அன்பு தீண்ட எனக்கு அருகதை இல்லையா.... ? உன் பாசத்தை பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் இல்லையா....? உன் கண்கள் ஒன்று சொல்கிறது உன் கவிதை வேறு சொல்கிறது உன் சிரிப்பு ஒன்று சொல்கிறது நான் எதை எடுக்க எதை தொடுக்க.. எதை கொடுக்க

என்னை வதை படுத்தி உன் மௌன வார்த்தைகளால் என்னை சிறைபடுத்தி விட்டாயே! உன் அன்பின் வாசல் திறக்கவில்லை என்றாலும் லேசாக சன்னலையாவது திறக்கக்கூடாதா..? உன் அன்பின் வாசத்தில் வாழ்ந்துவிட மாட்டேனா? அடியே பெண்ணே உன் செப்படி வித்தையால் சீரழிந்து நிற்கிறேனே அடி பாசாங்குக்காரி பேசிக்கழப்புகிறாய் பேசாமல் மௌனமாய் கொல்கிறாய் அய்யோ.... ஆடிக்காற்றில் அம்மியாய் பறக்கவிட்டு வேடிக்கை பார்த்து ஏளனமாய் மனதுக்குள் மௌனமாய் திட்டுகிறாய் இன்னும் என்ன செய்யப்போகிறாய் ..?ஏன் இந்த சித்து விளையாட்டு உன்னில் நானிருக்கிறேன் என்னில் நீயிருக்கிறாய் காதலை சொல்வதற்கு என்ன தயக்கம் அடி பைத்தியக்காரி உன்னை என் இதய சிம்மானத்தில் வைத்து உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் என்னை இழந்து விட்டு முட்படுக்கையில் உறக்கமின்றி தவிக்க போகிறாயா?

இது காதல் உனக்கிட்ட கட்டளையா? இல்லை காலம் எனக்கு தரும் தண்டனையா? சில நேரம் வானத்து நிலவாய் தொலைவில் நின்று மமதை கொள்கிறாய் சிலநேரம் வீசும் தென்றலாய் சிரித்துக்கொண்டு என்னை கடந்து செல்கிறாய் உன்னை புரிந்து கொள்ள முடியாமல் புயலில் சிக்கிய புழுவாய் என் மனம் தள்ளாடுகிறது!

பூக்களில் தேனிருக்கும் பூக்கள் அறிவதில்லை வண்டுகள் தெரிந்து வந்தால் அதன் அன்பும் புரிவதில்லை மகரந்த சேர்க்கையில்தான் மௌனமாய் உணர்ந்து கொள்ளும் தன்னில் இத்தனை இன்பங்களா என்று! புரிந்து கொள்ளடிப்பெண்ணே காமத்திற்கு ஒவ்வொரு நாளும் எல்லை உண்டு இந்த உலகத்தில் அன்புக்கு ஏதெடி எல்லை நான் உன்னை அன்பால் நேசிக்கிறேன்!

அன்பே ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.