peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


kavithai2.peperonity.net

சொல்லுடைந்த மாளை

அவன்
வருகிறான்
நினைவு நதியுடைத்து
நெக்குருகி நிற்க...

மூளை மரம் விடுத்து
அவிழ்ந்த
உணர்வுப் பழம்
நெஞ்சக் குடம்நனைத்து
இதழ் வந்து
சிறகு முளைக்க...

நெடு நாள்
கூடைசுமந்த
மூச்சுப் பெரும்புயலை
போட்டுடைக்க...

தான் என்னும்
புல்நுனியில்
மிதந்த
காதல் பணிக்குண்டு
உடைந்து
தன்மேலே வெள்ளை ஒளி
மிதக்க...

அந்த -
மாலை
இரவுக்கு
சாலை போடும்
வேளை...
அவள் வருகிறாள்
மந்திரக் கத்தியை வைத்து
அவன் மரணத்தை
தீண்டும்
மெல்லிய பார்வை பூண்டு...
அவளின்
கண்கள் பூமியை
கொத்தித் தின்ன
வார்த்தை வீச
எத்தனிக்கிறாள்

அவன்
அவள் பதில் பார்த்து
உடைந்த சூரியனாய்
உருகி வழிகிறான்

இல்லை என்னும்
எதிர்மறை நஞ்செடுத்து
அவள் வீசியதில்
இவன்
சொல்லுடைந்தது...

சோகம் அப்பிய
அந்த உலகத்தின்
ஒரே மாளையில்
அங்கிருந்த
அசோகமரத்தின்
கீழிருந்து
பிணம் ஒன்று
நடந்து போனது...


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.