peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


kavithai2.peperonity.net

வேகத்தடை

விறு விறுவென பாய்ந்து செல்ல
பூனையோ, புலியோ போல
விலங்கு அல்ல நீ... ஆறறிவு படைத்த
உன்னத பிறப்பான
மனிதபிறவி அல்லவா நீ...

அப்படி எல்லா வாகனங்களையும்
அதிவேகமாய் கடந்து செல்லும்
அவசியம் தான் என்ன?
ஒலிம்பிக் போட்டியிலா
கலந்து கொள்கிறாய் நீ...

வண்டியில் போகும் போது
அ(ழை)டிக்கும் கைபேசியின் ஒலி..
நீ வண்டியை நிறுத்திப் பேசினால்
அது சங்கீத ஒலி...

போகும் போதே பேசினால்,
அது தான் உன் வாழ்வின் கடைசியாய்
வழியனுப்பும் சாவு மணி...

போகும் இடத்தை அடைய
மித வேகம் நன்று...
திரும்ப வர இயலாத
இடத்துக்கு செல்ல
அதிவேகம் நன்று...
எது உனக்கு வசதி?

நீ செய்யும் தவறால்
உனக்கு மட்டும் தண்டனை
கிடைத்தால் பரவாயில்லையே...
உன்னை நம்பி பயணிக்கும்
அனைவரையும் தண்டிப்பது நியாயமா?
உன்னை நம்பி இருக்கும் குடும்பம்
தவிப்பது எப்படி நியாயம்?

சாகசம் செய்யும்
சர்க்கஸ் வீரர்கள் கூட
ஒரு கூண்டில் தான்
சாகசம் செய்கிறார்கள்... ஆனால்
நீ மட்டும் ஏன் நடுரோட்டில்
சாகசம் செய்கிறாய்?

உன் அதிவேகத்தால்
குடும்ப பாசக்கயிற்றை
அறுத்து விட்டு,
எமனின் சாவு கயிற்றில்
மாட்டிக்கொள்ளாதே மானிடா..


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.