peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


love image love
kavithai2.peperonity.net

கலையாத உன் மௌனம்..!!

மௌனம் உனக்கு
பிடித்த ஒன்று...
உன் மௌனத்தை
நான் மொழி பெயர்த்தே...
நமக்காய் ஒரு தாஜ்மகால்
கட்டி வைத்திருக்கிறேன்
தெரியுமா உனக்கு..?

அங்கேயும்....
உன் மௌனம் தொடரும்
எம் இதயங்கள் மட்டும்
அலை அலையாய்...
ஏதேதோ பேசிக்கொள்ளும்...
வெட்கத்தில் நான் நாணி,
உன் தோள் சாய்ந்து
உன் மௌனத்தை
மொழி பெயர்ப்பேன்.

மார்கழி மாதத்து
மெல்லிய குளிரில்
பூத்துத் தொங்கும் மலர்களாய்...
என் இதயம் குதூகலிக்கும்
உன் இதயம்
என்னோடு பேசும்
இனிமைப் பொழுதுகள்தான்...
என் வாழ்வின் வசந்த காலங்கள்

உன் மௌனம் கலைத்து...
மகுடம் சூடும் நாள் வரும்
அதுவரை காத்திரு
என் கண்ணாளா...

அன்று உன் இதயத்தின்
மெல்லிசையில்
மெட்டு அமைத்து
எனக்காய் நீ கவி பாடுவாய்.!
நான் உயிரின்றி
உன் நினைவுகளை
மட்டும் சுமந்து....
நீ என்னோடு
பேசும் அந்த அழகை
மெளனமாய் இருந்து
ரசித்துக் கொள்வேன்.

அது வரை இன்னும்
கலையாத உன்
மௌனம் தொடரட்டும்
என்னவனே..!


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.