peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


xtamilxkathai.peperonity.net

ஒரு அரவாணியின் கதை part 2

நின்றது.
மாளிகையின் கேட்டுக்கும், காருக்கும் இடையே சங்கேத மொழிகள் பரிமாறிக் கொள்ளப்பட, பிரம்மாண்டமான இரும்பு கேட் தானாக திறந்து கொண்டது.
அதன் உள்ளே சென்ற கார், மாளிகையின் வாயிலில் நின்றது. காரின் கதவு தானாக திறந்து கொள்ள....."யு ஹேவ் ரீச்ட் த டார்கெட், பிளீஸ் எக்ஜிட் ஃப்ரம் த கார், மிஸ் ராணி..." என்று ஒலித்தது.
பணக்காரப் பெண்ணுக்கே உரிய, மெல்லிய கர்வம் என்னை சேர்ந்து கொண்டது.அதிகப்பணம், ஆடம்பர வசதிகள் போன்றவை மனிதர்களின் மனங்களைக் கூட மாற்றும் என்பதற்கு சரியான உதாரணம். நான் காரைவிட்டு கீழே இறங்கினேன். மீண்டும் காரின் கதவு தானாக மூடிக்கொள்ள, காரின் இயக்கமும் நின்றது.
எனது வலது காலைத் தூக்கி, வீட்டுக்குள் முதல் அடியை வைத்தேன். பளிங்கு போல் பாலீஸ் செய்யப்பட்ட மார்பிள் கற்களாலான தரை. அதில் முதல் முறை கால் வைப்பது, ஏதோ நீச்சல் குளத்தில் நடப்பது போன்ற உணர்வையேத் தந்தது.
வீட்டு ஹாலின் நடுவே, ஒரு அழகான பெண்ணின் போட்டோ மாட்டி வைக்கப்பட்டிருந்தது. போட்டோவிலுள்ள, தெற்றுப்பல் தெரிய சிரித்துக் கொண்டிருக்கும் பெண்ணின் அழகை, யார் பார்த்தாலும் சொக்கிவிடுவார்கள்."ஹும்..., மிக, மிக அழகாகத் தான் இருக்கிறாள்..." என்று எனக்குள் நினைத்தேன்.
ஹாலின் இடப்புறமுள்ள படிகளில் ஏறி, முதல் தளத்தில் இருக்கும் படுக்கை அறைக்குச் சென்றேன்.
அந்த அறையின் நடுவே போடப்பட்டிருக்கும் கட்டிலில், வெள்ளை நிற விரிப்புகளால் பொதியப்பட்ட பஞ்சு மெத்தை. அதன் மேலே பரப்பி வைக்கப்பட்டிருக்கும் வண்ணமயமான டெடி பியர் பொம்மைகள் என ஒவ்வொன்றையும் பார்க்கப்பார்க்க பரவசத்தை கூட்டியது.
"ல, ல, ல, ல, லா......" என்று பாடிக்கொண்டே மேக்கப் டேபிள் பக்கம் திரும்பினேன். அங்குள்ள நிலைக்கண்ணாடியை நோக்கியபோது, கூரிய வேல்போன்ற எனது அகன்ற விழிகள் தெரிந்தன.
மேலும், ஹாலில் மாட்டி வைக்கப்பட்டிருந்த போட்டோவிலுள்ள அதே முகம், எனது பிம்பத்தை பிரதிபலித்தது. எனது கண்ணை கசக்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை பார்த்தேன், அதே உருவம் தான் மீண்டும், மீண்டும்தெரிந்தது.
எனக்கு நிலை கொள்ளவில்லை, நானா இவ்வளவு அழகு... வானுக்கும், பூமிக்கும் இடையில் குதிப்பது போல் குதித்தேன். நிலைக்கண்ணாடி அருகே சென்று, எனது முகத்தை ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.